விண்வெளி விந்தை

வானில் வீசிய பந்து கூட
மடிந்து கீழே விழுகும் போது…
மிதந்து நிற்கும் எந்தன் உலகை
விண்ணில் எய்த மனிதன் யாரோ!!
ஆயிரம் கோள்கள் அண்டத்தில் இருக்க…
கோடி உயிர்களை தாங்கிக் கொண்டு;
சுழன்று சுற்றும் பூமிப் பந்தை
தேடிப்பிடித்து படைத்தவன் எவனோ??
கடலை கடந்து வந்தவர் உண்டு;
காலம் கடந்து வந்தவர் இல்லை;
ஞாலம் அதனை புரிந்து கொள்ள
வாழ்க்கை முழுதும் போதவில்லை…..

எழுதியவர் : ப. நரேஷ் (7-Aug-17, 11:22 pm)
Tanglish : vinveli vinthai
பார்வை : 426

மேலே