கடல் பயணம்

கடல் பயணம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி
••••+••••
By கவிதைமணி | Published on : 07th August 2017 04:44 PM |
@உல கோர் க்கீந் தவுலகை
தீயோரா லுரு க்குலைத்திட க்கண்டான் கடவுளானவன் ||
உல கழிந்திடல் நன்றன்று
உலகோரை யழிப்போமென
இருதியாய் யுறுதியாய் முடி வெடுத்திட்டான் ||
இறைவனுக் குகந்தவன் நீதிமானொருவனைத் தேர்ந்து ||
மனிதா ஒரு பெட்டகத்தை
அமை த்தனுள் ஜீவராசி களெத் தனையோ வத் தனையில் ||
ஆண்பெண்னென இரவ்விரண்டாயும் பெட்டகத்தினுள் சேர்த்துக்கொள் ||
உன் குடும்பத்தாரையும் சேர்த்துக்கொள் ||
தீவனங்களையும் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள் ||
நாம் ஜலப்பிரளத்தை உருவாக்கி யெஞ்சிய வுயிர்களை யழிப்போம் ||
நாற்ப திரவும் நாற்பதுப் பகலும் மழையோ மழை ||
பள்ளங்கள் நிறைந்து சிகரங்கள் மூழ்கின ||
அதற்குமேலேயும் வெள்ளம்
உயிர்கள் அனைத்தும் மாண்டன ||
கடலெது நிலமெது வெனக்
கூறவியலா ச்சூழல்கள் நீரே
நிலை க்கொண்டிருந்தன ||
நிலம் நீரில் மிதக்கின்றனவா ||
இல்லை நீர் நிலத்தில் மிதக்கின்றனவா என||
நிலத்திற்கும் நீருக்குமேச் சந்தேகம் ||
இச்சந்தேகந் தீருமெப் போது ||
" கடல் பயணம்" கரைக் காணுமெ ப்போதோ அப்போது ||
•••••••
நன்றி :-
தினமணி கவிதைமணி
"கடல் பயணம்"