நடமாடும் பெண் தெய்வங்கள்
அவளை பார்த்தேன் , பார்த்தபோது
அவளழகும் வசீகரமும் என்னுள் பெரும்
காமத்தீ வளர்த்து பித்தாக்கியது என் மனதை ;
அவளோ என்னை ஏறெடுத்து பார்க்கவும் இல்லை
குனிந்த தலை நிமிராது அத்தனை அழகும்
பெற்றிருக்கும் தன உடலை அடக்க ஒடுக்கத்தோடு
தன்னடக்கம் தாங்கி நடத்தி சென்றாள் ஆரணங்காய் ,
இதை நோக்க என் காமத்தீ அணைந்து பித்தமும்
தெளிந்தேன்; அறிந்தேன் இப்படியும்
அறம் வளர்க்கும் தெய்வ மாந்தர் நம்மண்ணில்
உலாவி வரத்தான் செய்கிறார்கள் கற்புக்கரசியராய் ,
நடமாடும் பெண் தெய்வமாய் சக்தியாய்
இப்படித்தான் இருந்தாரோ கண்ணகியும்
காரைக்கால் அம்மையாரும் என்று
என்று மனதில், கற்பனையில் இவர்களையும்
கண்டுகொண்டேன்
அழகிய பெண்ணை கண்டால் இப்போதெல்லாம்
என் மனதில் சஞ்சலம் ஏதும் இல்லை
தடுமாற்றமும் இல்லை இவர்கள் எனக்கு
தெய்வமாய் கட்சி தருவதாலே