நண்பன்-நட்பு

நண்பா,உனக்கு உயிர் நண்பன்
என்று பெயர் ஏன் வந்தது
இன்று புரிந்ததே ,ஐயகோ
உன் உயிர் தந்து என் உயிரைக் காத்தாயே
இன்று சமரில் நம் நாட்டின் எல்லைக்காக்க
நடக்கும் இப்போரில் -இறக்கும் பொது
என் மடியில் நீ கிடக்க கண் வழியே சென்ற
உன் உயிர் என்னிடம் சொன்னது
'நட்பே, நண்பனே என் உடல்,பொருள்,ஆவி
அன்றே உன்னதாயிற்று நீ என்னை
உன் உயிர் நண்பன் என்று சொன்னாயே அன்றே'
இப்போது அவன் என்னுள் கலந்துவிட்டான்
நான் அறிகின்றேன்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Aug-17, 4:48 pm)
பார்வை : 731

மேலே