எலெக்ட்ரானிக் பூக்கள்


இது கவிதைப் பூங்கா
சிந்தனை மலர்களின்
அழகிய தோட்டம்
இங்கே
மலர்களை தொடாதே
பறிக்காதே என்ற போர்டுகள் இல்லை
யார் வேண்டுமானாலும் தொடலாம்
முகரலாம் பறித்துக் கொள்ளலாம்
பறித்தாலும் மீண்டும்
பூத்துக் குலுங்கும்
இந்த எலெக்ட்ரானிக் பூக்கள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jul-11, 11:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 502

மேலே