மாறாத வடுக்கள்

வள்ளி அன்றும் வழமை போலவே கிழக்கு வெளுக்கும் முன்பே வீட்டைச் சுத்தம் செய்து முடித்து விட்டு கணவனுக்கு உணவு தயாரித்து கொடுத்து வேலைக்கு அனுப்புவாள் அதன் பிறகு காலை சாப்பாடு செய்துகொண்டு
தொலைக்காட்சி நிகழிச்சிகளை பார்ப்பது வழமை என கொள்வாள் அன்றும் அப்படி தான் தொலைக்காட்சியில்
"ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்" என அழகிய பாடல்
ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது அதை ரசித்து கேட்டு கொண்டுஇருக்கையிலே அவள் மகள் (சிந்து ) இடையில் வந்து அம்மா அம்மா இந்த பாடலை மாத்துங்கோ என்று கூற எதோ இழந்தவளாய்
மகள் மீது கோவம் வந்தது. குழந்தை சிந்துவும் அழத் தொடங்கினாள்
அப்பொழுது மறுபடியும் இயல்பு நிலைக்கு வந்த வள்ளி ,சிந்துவை சமாதானப்படுத்திவிட்டு குழந்தை விரும்பிய நிகழ்ச்சியை மாற்றம் செய்துவிட்டு கண்கள் கலங்கிய வண்ணம் வெளித்திண்ணையில் வந்து அமர்ந்து இருந்தாள். அவளின் நினைவுகள் மெல்ல கடந்து சென்ற அந்த கசப்பான சம்பவத்தை நோக்கி மீண்டும் ஒருமுறை
அலை பாய தொடங்கியது. வள்ளி இயற்கையாகவே பேரழகு கொண்டவள், அத்தோடு பெரியவர்களுக்கு கீழ் படிந்து நடப்பாள் . அவள் அழகைக் கண்டு பெண்களே பொறாமை கொள்ளும் அளவுக்கு அழகிய உடலமைப்பைக் கொண்டவள்.ஆகவே அவள்
மீது ஆண்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் ஆண்களை கண்டாலே தலையை கீழே போட்டு அமைதியாக ஒதுங்கிச் செல்வாள் .இவ்வாறு அமைதியாக சென்றுகொண்டிருந்து அவளது வாழ்வில் யாருடைய கண்கள் பட்டதோ
என்னவோ வள்ளி வாழ்வில் ரவியின் வடிவில் விதி விளையாட தொடங்கியது ரவியின் பார்வை (காமப்பார்வை)வள்ளி மீது பட்டது ரவிக்கும் வள்ளியை எப்படியாவது
அடைந்திட வேண்டுமென நினைத்தான். நினைத்தவாறே பல திட்ட்ங்கள் போட்டு பார்த்தான் .தொல்லைகள் கொடுத்தும் பணியவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த ரவி தனது
தோழர்களுடன் தனது ஒருதலை காதலை கூற அவர்களும் எதிர்க்கருத்து ஏதேனும் சொல்லமால் வள்ளியின் குடும்பத்தை அவமானப்படுத்தி அவளை எவ்வாறு அடையலாம் என திடடம்
போட்டு அவள் குடும்பத்தை ஊராரிடம் கெட்டபெயர் வாங்க வைத்தார்கள். வள்ளிக்கு துணையாக இருந்தது வயதான அவளது தாய் மட்டும்தான் அதானால் அவள் குடுன்பம் நொந்து
இருக்க நெருங்கி பழகியவர்களுக்கு இவர்களை தெரியாதது போல நடக்க விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல கிராமமே அவமானப்படுத்த, அதிர்ச்சியிலே அவளது ஒரே உறவாக இருந்த தாயாரும் இறந்து போக

நடைப்பிணமாக ஊரை விட்டு வெளியேற முனைந்தாள்.
அப்பொழுதும் ரவியும் தன்னால் ஒரு குடும்பம் வீதிக்கு
வந்துவிட்டதே என நொந்து கடிதம் எழுதி வைத்துவிடு தற்கொலை
செய்து கொண்டான் .

எழுதியவர் : காலையடி அகிலன் (15-Aug-17, 10:20 am)
Tanglish : maaradha vadukkal
பார்வை : 353

மேலே