சுதந்திரம் பெற்று விட்டோம்

இந்தியாவை அடிமைப்படுத்திய அந்நியனை
இந்தியா அழைத்து வருவதற்கேனும்
சுதந்திரம் பெற்று விட்டோம்..!

இந்திய வளத்தை கொள்ளையடித்தவனுக்கு
இந்திய வளத்தை விற்பதற்கேனும்
சுதந்திரம் பெற்று விட்டோம்..!

அந்நியன் ஆத்மாவில்
இந்தியனென்று ஓருவன் ஆழவேனும்
சுதந்திரம் பெற்று விட்டோம்..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (15-Aug-17, 3:32 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 2167

மேலே