நாடு மாறும் எப்போது
நாம் மாறுவது எப்போது
நாடு மாறுமே அப்போது..!
விவசாயம் வாழ வேண்டுமென்கிறோம்
வீடு எங்கே கட்டுகிறோம்..!
சுகாதாரம்,சுத்தம் வேண்டுமென்கிறோம்
குப்பை எங்கே கொட்டுகிறோம்..!
மழை வரவில்லை என்கிறோம்
மரத்தை ஏன் வெட்டுகிறோம்..!
பெண்ணை கடவுளாக போற்றுகிறோம்,
காமமாக ஏன் அவளை சுற்றுகிறோம்..?
ஊழல் என்று ஊலை இடுகிறோம்,
நம் வேலை தீர, லஞ்சத்தை ஏன் நீட்டுகிறோம்.
ஜாதிகள் வேண்டாம் என்கிறோம்,
சலுகை என்றால் ஜாதி சான்றிதழை
தேடுகிறோம்...
நாடு வளர்ச்சி வேண்டுமென்கிறோம்
வரி எங்கே கட்டுகிறோம்...!
நல்ல தலைவன் வேண்டுமென்கிறோம்
காசு வாங்க கை ஏன் நீட்டுகிறோம்..!
நல்லது செய்பவரை தூற்றுகிறோம்
அவர் போன பின்னே போற்றுகிறோம்.
எதை எதையோ பேசுகிறோம்,
நாம் மட்டுமே அறிவாளி என்று காட்டுகிறோம்.
மாற்றம் வேண்டுமென்றால்
மாற வேண்டியது நாம் தானே..!
நாம் மாறுவது எப்போது
நாடு மாறுமே அப்போது..!