பொது நலம் பேசும் சுயநலக்காரன் நாம்
சுதந்திரமாய் சுற்றி திரிந்த காற்றை நான்கு சுவருக்குள் சிறை வைத்து (ஏசி) அனுபவிக்கும் சுயநலக்காரனாய் நாம்
நமது பிள்ளைக்கு சொல்லுகிறோம் பொதுவுடைமை வேண்டுமென்று...
பிள்ளை கேட்கிறான் புவி வெப்பமாதல் எதனால் என்று... நாம் செய்த தவறை மறைக்க கூசாமல் சொல்கிறோம் மரங்கள் இல்லை என்று...
இயற்கையின் எதிரிகளை வீட்டுக்குள் வைத்திருந்தோம்
செயற்கையின் நச்சுக்களை குழந்தைக்கும் ஊட்டி வளர்த்தோம்...அழகை கெடுக்கும் என மரத்தை வெட்டி வீசி
அழகுக்காக மரம் வளர்க்கும் சுயநலக்காரனாய் நாம்
இங்கு பொதுநலம் பேசுகிறோம்.. வாழ்க்கை பயம் நம்மை துரத்தும் போதுதான் புத்தியில் உரைத்தது இயற்கையே தெய்வம் என...இனியாவது விழித்திடுவோம்
இயற்கையை மதித்திடுவோம்
விவசாயம் காத்திடுவோம்