தந்தைக்கு சமர்ப்பணம்

கேட்டதெலாம் தருவார்,
கேட்டதற்குமேலும் தருவார்,

அன்னையாய் மாறிடுவார்!
என்னை தூங்க வைக்க
கதை சொல்கைலே.....

என் தேவைகளை
பூர்த்தி செய்ய பல நேரங்களில்
சிறுவனாக மாறியவர்!!!

பாடங்களை நான் கற்க
சக தோழனாக
மாறி நின்றவர்!!!

தினமும் ஒரு கதை என்று
எனக்கு புரியும் வகையில்,
வாழ்க்கை நெறியை கற்று
தந்த குரு என் அன்பு தந்தை.......


இயல்பான அன்றாட வாழ்கையில்,
நான் அறிந்த முதல் நாயகன் - என்
மனம் நிறைந்த என் பிதா....

பேச கற்று தந்தார்,
எழுத கற்று தந்தார்,
பாட கற்று தந்தார்,
ஆடலும் பழகி தந்தார்,

ஏனோ அவர்
எனக்கு அழ மட்டும் கற்று தரவில்லை,

அதை
நானே கற்று கொண்டுவிட்டேன்,

என் தந்தை
என்னை விட்டு இறைவனடி சேர்ந்த நாளில்.....

மனிதனாய் வாழ்ந்தவர் இன்று
ஒளிரும் நட்சத்திரமாய்,

வானிலிருந்து தினமும்
பார்க்கிறார் என்ற
நம்பிக்கையில் வாழ்கிறது,

என் தந்தை
விட்டு சென்ற
அவர் உயிரால் துடிக்கும் இதயம்.......


எழுதியவர் : Meenakshikannan (22-Jul-11, 1:05 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 374

மேலே