உன்மடியை தேடிவந்தேன்

உன் மடியை தேடிவந்தேன்
கோடி கோடி உயிரணுவில்
பத்துமாதம் உள்ளிருந்து உன் முகம் காண தவமிருந்தேன்
பாலூட்டி சீராட்டி பூபோல பூக்கவைச்சும்
பூவான என்னுடம்பை பூதமென வெறுத்ததென்ன?
உன் ரத்தம் என்றபின்னும்.பித்தமென
ஏன் வெறுத்தாய்
பிறந்த பிள்ளை அழுதிருக்கும் பின்பு அது சிரித்திருக்கும் தாயன்பின் தாலாட்டில்
பூவான என்னுடலை பிறவி முழுதும் அழுவதற்க பெற்றெடுத்தாய்
என்னை வெறுத்திடவா சுமந்து நின்றாய்
அம்மா என்றழைக்கையிலே
ஓடிவர யாருமில்லை
கண்ணீரை துடைத்திடவும்
கைகளிங்கே இல்லையம்மா
உறவான தாய்மனமோ
வெறுத்ததென்ன வெளுத்ததென்ன
பாவி நானும் ஏன் பிறந்தேன்
உன் வெறுப்பினிலே வாழ்ந்திடவா
கிழக்குமில்லை மேற்குமில்லை
தாயுமில்லை உறவுமில்லை
வரும் திசைகள் வந்திடட்டும்
என் வாழ்வு பாதை சென்றிடவே