என் கம்பீரத்தின் குரல்

அவள் கன்னியல்ல
ஆனால் கண்ணியமானவள்
அவள் குரல் சங்கீதமல்ல
ஆனால் என் ஆசைகளின் சங்கமம்
அவள் தேன் கொண்ட தேனீ அல்ல
ஆனால் போர்களின் சமாதானப் புறா
அவள் மஞ்சள் நிலவல்ல
ஆனால் என் வாழ்வின் நித்திமம்
அவள் ரதியல்ல
ஆனால் என் புன்னகை ரத்தினங்கள்
அவள் என் தோல்விகளால் நாணமடையவில்லை
சிறு நாழிகையில் என்னை செதுக்கினாள்
அவள் என் தெய்வமில்லை
அத்தெய்வம் என்னை நிராகரித்த போதும்
என்னை நேராக நிற்கச் செய்தவள்
அவள் என் உலகமில்லை
ஆனால் அவளின்றி எனக்கு இவ்வுலகமேயில்லை
அவள் என் தாய்
என் கம்பீரத்தின் குரல் அவள்

எழுதியவர் : சந்தியா (17-Aug-17, 8:10 pm)
பார்வை : 99

மேலே