கடல் பயணம்
கடல் பயணம்
கவிதை by கவிஞர் பூ.சுப்ரமணியன்
கயல்கள் துள்ளி விளையாடும்
கடல் அலைகளிலே
ஊடலில் பிரிந்த காதலர்கள்
கூடலில் சுற்றிய
இன்பக் கடல் பயணம் !
அமெரிக்க மண்ணில்
ஆன்மீக விதையை தூவி
இந்தியாவை உலகுக்கு காட்டிய
வீரத்துறவி விவேகானந்தர்
சென்று மகிழ்ந்த
ஆன்மீக கடல் பயணம்!
அந்நியநாட்டு வெள்ளையனை
நாட்டை விட்டு விரட்ட
வ.உ. சிதம்பரனார் கப்பல் ஓட்டி
கொள்கை முழக்கமிட்ட்
வீரதீரக் கடல் பயணம் !
கடல் தாண்டிய காதலனை
காணாமல் துடித்த இதயம்
கடல் வழியே பறந்தது
அமராவதியின் எல்லையில்லா
காதல் கடல் பயணம் !
வணிகம் வளர
திரைகடல் ஓடியும்
திரவியம் தேடி மகிழ்ந்த
வணிகர்கள் சென்று
மகிழ்ந்த கடல் பயணம் !
காதந்த ஊசியும் வரா
கடைவழிக்கே
கல்லாதவரும் புரியும்படி
பட்டினத்தார் சென்றது
தத்துவக் கடல் பயணம் !
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

