புரிதல்
புரிதல் என்பது...
புரிந்து கொள்ள வேண்டுமென்று,
நம் எண்ணத்தில் பிறந்து...
புரிந்து கொள்ள தொடங்குகிறேன்...
என்று மெதுவாய் வளர்ந்து...
புரிந்து கொண்டேன் என்று
தவாறாக புரிந்து கொண்டு...
புரிந்து கொள்ள நினைத்தேன்...
புரிய முடியவில்லை என்று...
ஒரு கட்டத்தில் புரிதல் என்பது
புரியாமல் மரணித்து விடுகிறது...!!
- ஜெர்ரி