நாளை கவலை

நாளை வாழ இன்று ஏதோ
தின்று படுக்கிறோம்...
நாளை கவலை நம்மை
துரத்த இறந்து உறங்கினோம்
கவலை மறந்து உறங்கினோம்

காத்திருக்கும் கவலை காண
தினமும் விழிக்கிறோம்
மீண்டும் மீண்டும் துவண்டு போக
நாமே துடிக்கிறோம் ...

தேடல் தேடல் என்று சொல்லி
நம்மை நாமே தேடுவோம்
மீண்டும் மீண்டும் நம்மை தொலைக்க
விலகி ஓடி தப்பி பிழைத்து
மிஞ்சும் உயிரை காத்து நிற்க
தினமும் துடிக்கிறோம்
நமது உயிர்கள் பிழைத்து வாழ
வழியை அமைக்கிறோம் ....
அதிலும் கூட பிறர் வலியை
மறந்து வாழ துடிக்கிறோம்

தூக்கம் என்னும் பெயரில்
நாமும் தினமும் இறக்கிறோம்
கொஞ்சம் இருக்கிறோம் ...

எழுதியவர் : ருத்ரன் (19-Aug-17, 7:59 pm)
Tanglish : naalai kavalai
பார்வை : 89

மேலே