காட்டின் பெண்ணே

காட்டின் பெண்ணே.... (Celtic version.... Forest queen)


ஒரு நேரம் போல்...
ஒரு நேரம் இல்லை...
ஓராயிரம் ஆசைகள்..
ஓரமாய் நிற்கிறது...
ஒரு பெண் ஒருவளுக்கா...

புல்லாங்குழல் இசையில்..
புயல் ஒன்று சென்று...
இசை இடியாய் மாறியது...
இவளின் கையில்..
இன்னுயிர் இயற்கை எய்தியது...

உயிர் தருவாளா....
இவள் மடியில்...
உறங்கும் என் உயிரிற்கு...
தந்தாள் எழுவேன்...
மறுபிறவி இவளால் கண்டு..
மரணம் வெல்வேன்..
இயற்கை இவள் அழகில்..
கரம் பணிந்து....

காட்டின்..
மரங்களின் சுரங்கள்...
என் கவிதைளில் சேர்ந்து...
காற்றில்...
இலைகளில் இதமாய்..
வெளிவருகிறது என் பாடல்...
காட்டின்...
இளம் இளவரசிக்கு...
காற்றில்...
கதிரவனின் ஒரு பாடல்....
காதல் பாடல்...

காலம் எல்லாம்...
துணை இருப்பேன்...
துயில் கொண்டாலும்..
இரவில் நிலவாய்..
நான் வருவேன்...
ஞாலம் எல்லாம்..
நான் இருப்பேன்.....
அடர் காட்டின் பெண்ணே..
கட்டி அணைப்பேன் உன்னை ..
என் பரந்த மார்பில்...
கட்டி அணைப்பேன் உன்னை...


By bmh arun

எழுதியவர் : Bmh arun (20-Aug-17, 10:28 pm)
Tanglish : kaattin penne
பார்வை : 107

மேலே