அப்பாவிற்கு ஆசை மகனின் கடிதம்

நம் கால் வலிக்க கூடாது என்று..
நம்மை தோளில் சுமந்த ஒரு உறவு...
நாம் கண்ணீர் சிந்த கூடாது என...
வியர்வை சிந்தும் ஒரு உறவு...
தான் ஒரு ஆண் என்பதை மறந்து
பெண்மை கொள்ளும் ஆண்மை உறவு...
கவிதைகள் வர்ணிக்க வார்த்தை தேடும்...
கர்வம் கொண்ட கண்ணிய உறவு...
நம் சிரிப்பை பார்த்து..
அதன் கண்ணீர் மறக்கும் உறவு...
எத்தனை உறவுகள் என்னை கடந்தால் என்ன,,,,
எனக்கென கனவு காணும் என் உறவே...
உன்னை நிகர் செய்யும் ஒரு உறவு ஏதும் இல்லை...
என் கனவுக்காக கண் மூடா என் உறவே..
எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஒரு ஆண்..
என் சிறு காயம் பார்த்து கண்ணீர் வடிக்கும் போது..
கர்வமாக சொல்லி கொண்டேன் இவர் என் தந்தை என்று...
என் மகனை நான் கொஞ்சும் நாள் வந்தாலும்..
உன்னை போல் ஒரு தந்தையாக இருப்பேனா என்று நான் அறியேன்...
உலகின் மிக சிறந்த தந்தை என் தந்தை என யார் கூறினாலும்..
நானும் உரக்க சொல்லுவேன்
என் தந்தை போல் என் தந்தை மட்டும் என்று.....