சில நேரம்

சில நேரம் விழிதரும் பாதைகள் காட்டினாய்
சில நேரம் வலிதரும் வாதைகள் கூட்டினாய்

சில நேரம் பூக்கள் பூக்கச் செய்தாய்
பல நேரம் முட்கள் தூவி சென்றாய்

சில நேரம் எங்கெங்கோ கூட்டிச் சென்றாய்
சில நேரம் உன்னைஏனோ பூட்டிக் கொண்டாய்

சில நேரம் மழையில் நனையச் செய்தாய்
சில நேரம் குளிரில் காய்ச்சல் தந்தாய்

சில நேரம் புதிதாக தளிர்கள் தந்தாய்
பல நேரம் சருகாக உதிரச்செய்தாய்

சில நேரம் கண்கள் குவிக்கச் செய்தாய்
சில நேரம் கண்கள் பனிக்கச் செய்தாய்

சில நேரம் இனிக்கும் கனவுகள் தந்தாய்
பல நேரம் வலிக்கும் நினைவுகள் தந்தாய்

சில நேரம் அழகிய அலைகளாய் ஓடினாய்
சில நேரம் சுழற்றும் சுனாமியாய் மூடினாய்

சில நேரம் புன்னகைகள் பூத்தே களித்தாய்
சில நேரம் கோபங்கள் கனலே தெளித்தாய்

சில நேரம் ரசித்து உருகச் செய்தாய்
சில நேரம் விசித்து மறுகச் செய்தாய்

சில நேரம் செல்லாநிழலின் துணையாய் தொடர்ந்தாய்
சில நேரம் புல்லாங்குழலின் இசையாய் படர்ந்தாய்

சில நேரம் தென்றலின் சுகம் காட்டினாய்
சில நேரம் தணலின் முகம் நீட்டினாய்

சில நேரம் தாங்கும் விழுதுகள் ஆனாய்
சில நேரம் தூங்கா கழுகுகள் ஆக்கினாய்

சில நேரம் திரியும் பறவைகள் ஆகினோம்
சில நேரம் எரியும் விறகுகள் ஆக்கினாய்

சில நேரம் நீ வேண்டாமென்று விழிஇருக மூடிக்கொள்கிறேன்
சில நேரம் நீமட்டும் வேண்டுமென்று வழியற்று மடிதேடுகிறேன்

சில நேரம் என்னில் முழுதும் கரைகிறேன்
சில நேரம் உன்னை மட்டும் எழுதுகிறேன்

சில நேரம் குழந்தையாய் என்னில் விழுகிறேன்
சில நேரம் குவியமாய் உன்னில் எழுகிறேன்

யாழினி வளன்

எழுதியவர் : யாழினி வளன் (20-Aug-17, 11:20 pm)
Tanglish : sila neram
பார்வை : 183

மேலே