திகைத்து நிற்கின்றது

உன் கூரை வீட்டு முற்றம்
உன்னை முட்டி முட்டி
நாள்தோறும்
முத்தம் இடுவதாய்
நீ புகார் அளிக்கின்றாய்
உன் வீட்டு தென்னை குலை
போட்ட தாய் பூரித்து
போகின்றாய்
நீயும் தான் என்பதை மறந்து
நீ வாழை இலையில்
உணவு அருந்தி விட்டு
எச்சல் இலை என்று
தூக்கி எரிந்து விட்டாயமே
வாழை மரம் வருந்துவது
தெரியாமல்
உன்னை சுமக்கும் காலனியை
கோவிலின் வாசலில்
விட்டு விடுகின்றாயமே
கடவுள் வருந்துகின்றார்
நீ கோவிலை சுற்றாதே
மதில் சுவர் கள் செய்வதரியாமல்
திகைத்து நிற்கின்றது