வீடு
ஆலயம் ஆகும் நம் வீடு
அன்பு நிறையும் ஒரு கூடு
சிறியோர் பெரியோர் உடனே
இணைந்து வாழும் நல்லுறவு
கஷ்டம் முழுதும் பனி போல் விலக
பெரியோர் ஆசி உண்டு
இனிதே நடக்கும் மனதில் நினைப்பது முழுதும்
களைப்புடன் வந்தால் அது நீங்கி நிறைவு தோன்றும் மனதில்
ஆலயம் ஆகும் நம் வீடு