நடை பயில்வோம்...

தையத் தக்கா நடை பயின்று
தொபக்கடீர் விழும் குழந்தையும்
பறந்து போகும் காகிதம் வேண்டி
கண்ணீர் சிந்தும் மழலையும்

எதை நினைத்து முயன்ற போதும்
தோல்வி தழுவும் இதயமும்
எதையோ விரும்பி நாட்டம் கொள்ளும்
நிலையில்லாத ஆசையும்

வளர்ந்த போதும் குடியிருக்கும்
மழலையின் ஞாபகங்கள்...
ஏனோ விழ விழ எழுந்திருக்கும்
முயற்சி மட்டும் மறந்துவிட்டோம்...

விழுந்ததையே எண்ணி எண்ணி
மனமதைப் புண் ஆக்குகிறோம்...
வீழ்வது நமக்குப் புதிதில்லை...
வாழ்வது நம் கையில்...

இலக்கு என்பது புரிந்துவிட்டால்
இலகுவாகிவிடும் நடைப் பயிற்சி
ஓட்டமாகித் தடுக்கி விழுந்தாலும்
இலக்கு நோக்கி விழுவோம்...

எழுவோம் எழுவோம்
எத்தருணத்திலும் எழுவோம்...
ஓயாத முனைப்போடு
எழ எத்தனிப்போம்...

எழுதியவர் : shruthi (22-Jul-11, 6:23 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 286

மேலே