பயணங்கள்
தூசி கண்டேன் தூசி கண்டேன்
துவண்டு தான் போனேன்
நிலை குத்தின பார்வையோடு
தூசி ஒன்றும் நான் கண்டேன்...
ரயில் பூச்சியின் பாகங்கள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஏதோ கூறு போட்டது போல்
காய்ந்து போய் சிதறிக் கிடந்தது...
இன்னும் கொஞ்ச பேர் மிதித்துப் போனால்
ரயில் பூச்சியின் அடையாளமே
காணமல் போய் மக்கி நிற்கும் மண்ணாய்
தொக்கி நிற்பதும் எதுவோ?
ஏனோ என் உடம்பையும்
சுமப்பது எதுவோ?
தூசி சுமக்கும் நாணக் கேடோ?
வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல்...
வளர்ந்து நடப்பது தான் என்ன?
என்னவோ வாழ்க்கை என்றாலும்
எதற்கு என்ற கேள்வி மட்டும்
நடையின் ஊடே ரயில் பூச்சியாய்...