தாய் தங்கை தோழி மற்றும் துணைவி

இரவையும் பகலாக்கி
பாசத்தைப் பாலாக்கி
கருவறையில் தாலாட்டி
கண்ணீரில் சிரிக்க வைத்த
தங்கத் தாயாக..!!

விளையாட்டில் பொம்மையாக
அப்பா திட்டுக்களின் காரணமாக
பாசச் சண்டைகளில் எதிரியாக
பாசமலர்த் தங்கையாக..!!

பயணத்தில் துணையாக
வினைக்கெல்லாம் தீர்வாக
நினைவுகளில் கண்ணீராக
என்றென்றும் தோழியாக..!!

வாழ்க்கைத் துணையாக
முதுமையில் தோழியாக
இன்பதுன்பமெல்லாம் இவளாக
ஓருயிர் மனைவியாக..!!

இத்துணைப் பெண்கள்
என்னைச் சிரிக்க வைக்க
சில நேரம் மட்டும் வந்து
பல நேரம் அழ வைத்த
அவளை என் நினைக்க வேண்டும்..
பெண்ணில்லை என்றால்
எவனுக்கும் இல்லை
களிப்பும் கண்ணீரும்..!!

எழுதியவர் : Karthik.M.R (22-Jul-11, 7:15 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 369

மேலே