நினைக்கவில்லை

அன்பே
நிஜங்கள் எல்லாம்
என்னை நேசிக்க மறுத்த வேளையில்
நினைவுகளை
நேசிக்கலாம் என்று
நிழலாக நின்ற
மரம் ஒன்றைக் கண்டேன்!,

நிச்சயம்
நிழல் இருக்கும் என்று
எண்ணி தான் வந்தேன்!
ஆனால்
அங்கு நீ நிற்ப்பாய்
என்றும் நினைக்கவில்லை!!
உனக்கே நிழலாக
ஒருவர் நிற்ப்பார் என்றும்
நினைக்கவில்லை!!,

சுடாத சுடர்(சூரியன்) ஒன்று
எண்ணெய் இன்றி
என்னை எரிக்க
எரிதழலாக நான் நிற்பேன் என்றும்
நினைக்கவில்லை!
என் நிழலே
என்னை எரிக்கும் என்றும்
நினைக்கவில்லை...
.................................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (21-Aug-17, 7:45 pm)
Tanglish : ninaikkavillai
பார்வை : 272

மேலே