காதல்பரிசு

என் காதலன் எனக்கு தந்த
முதற்பரிசு அவன் இதயம்
அவனல்லவா என் வாழ்வின்
நம்பிக்கைச் சதயம்
நான் அவன் மேல் காட்டியது
அளவற்ற வெறுப்பு
நான் இன்று கொண்டதோ
அவன் தாயென்னும் பொறுப்பு
சக்தியில் பாதி சிவன்
என் நிகழ்காலத்தின் மீதி அவன்
காதல் கோட்டையைக் கட்டி வைத்துள்ளேன்
அதன் சாவியும் உன் கையில்
என் சாவும் உன் கையில்
உன் சுவாசக் காற்றை
உள்வாங்க காத்துள்ளது இவ்வுள்ளம்
அடேய் பைத்தியக்காரா....

எழுதியவர் : சந்தியா (21-Aug-17, 9:11 pm)
பார்வை : 156

மேலே