தமிழ் கவிதை

வறண்ட மனதை நனைக்கும் மழை
இருண்ட கணத்தில் ஒரு மின்மினி பூச்சு
நினைவுகளை புதையல்களாக மாற்றும் மந்திரம்
வாழ்வின் நிஜங்கள் கசக்கும் போது
ஒளிந்து கொள்ள ஒரு ரகசிய குகை
வயது துரத்தும் போது
ஆசுவாசம் தரும் ஒரு ஆறுதலின் கரம்
வளைவுகள் கொண்ட வாலிப பெண்ணின் வனப்பும்
நரைமுடி கொண்ட முதியவளின் அனுபவமும்
நிரந்தரமற்ற நடுத்தர வயதின் எண்ணங்களும்
கண்ணுக்குள் வந்து போகும் கனவே கவிதைகள் !!!!!!

எழுதியவர் : அர்ச்சனா (21-Aug-17, 9:17 pm)
Tanglish : thamizh kavithai
பார்வை : 1565

மேலே