அர்ச்சனா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அர்ச்சனா |
இடம் | : |
பிறந்த தேதி | : 14-Jan-1975 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 249 |
புள்ளி | : 9 |
விதையாக விழுந்தாலும் விருட்சமாகி நில்!
மலராக விழுந்தாலும் மணமாகி நில்!
நிழலாக விழுந்தாலும் நிஜமாகி நில்!
அலையாக விழுந்தாலும் கடலாகி நில்!
மழையாகி விழுந்தாலும் மேகமாகி நில்!
வீழ்தலும் எழுதலும் இயற்கையின் தாற்பரியம்!
வீழ்ந்தாலும் எழுவது வாழ்வின் தாற்பரியம்!
கர்ப்பிணி பெண் தலையில்
விறகு மூட்டை !
பாரம், வயிற்றிலா? வறுமையிலா?
மூன்றாவதும் பெண் குழந்தை!
பாரம் பெண்ணிலா?
ஆண் ஆதிக்கத்திலா?
கர்ப்பிணி பெண் தலையில்
விறகு மூட்டை !
பாரம், வயிற்றிலா? வறுமையிலா?
மூன்றாவதும் பெண் குழந்தை!
பாரம் பெண்ணிலா?
ஆண் ஆதிக்கத்திலா?
கன்னத்தில் மழை!
உள்ளத்தில் வெள்ளம்!
உதடுகளுக்கோ உப்பிலே உபசரிப்பு !
வறண்ட மனதை நனைக்கும் மழை
இருண்ட கணத்தில் ஒரு மின்மினி பூச்சு
நினைவுகளை புதையல்களாக மாற்றும் மந்திரம்
வாழ்வின் நிஜங்கள் கசக்கும் போது
ஒளிந்து கொள்ள ஒரு ரகசிய குகை
வயது துரத்தும் போது
ஆசுவாசம் தரும் ஒரு ஆறுதலின் கரம்
வளைவுகள் கொண்ட வாலிப பெண்ணின் வனப்பும்
நரைமுடி கொண்ட முதியவளின் அனுபவமும்
நிரந்தரமற்ற நடுத்தர வயதின் எண்ணங்களும்
கண்ணுக்குள் வந்து போகும் கனவே கவிதைகள் !!!!!!
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
நீ என்னை,
புதிர் என நினைத்தால் - விடை
விடை என நினைத்தால் - வினா
வினா என நினைத்தால் - புதிர்
எளிமை என நினைத்தால் - கடினம்
மர்மம் என நினைத்தால் - எளிமை
நான் நீ நினைப்பதல்ல !!!
நீ நிர்ணயிப்பதுமல்ல !!!