நில்

விதையாக விழுந்தாலும் விருட்சமாகி நில்!
மலராக விழுந்தாலும் மணமாகி நில்!
நிழலாக விழுந்தாலும் நிஜமாகி நில்!
அலையாக விழுந்தாலும் கடலாகி நில்!
மழையாகி விழுந்தாலும் மேகமாகி நில்!
வீழ்தலும் எழுதலும் இயற்கையின் தாற்பரியம்!
வீழ்ந்தாலும் எழுவது வாழ்வின் தாற்பரியம்!

எழுதியவர் : அர்ச்சனா (23-Aug-17, 8:16 pm)
Tanglish : nil
பார்வை : 156

மேலே