தேடலின் நிழல்கள்

தேடல்களின்
முடிவு;
கிடைத்தல்...!
அமாவாசை தொடர்ந்து
திங்கள் வரை
விழித்திருப்பது போல்....
தேடுவது ஒளியில்லை நிலவு!
தீயின் நீல் விழியில்
மார்கழி பனியில்....
தேடுவது வெம்மையில்லை உன்னை!
மொழியறியாதோன்
தமிழில் வீழ்ந்ததுபோல்
குழைந்தேன்
தேடுவது காமம் அல்லை
பெண்மையை!
நொடிகள் ஊனமோ?
ஊமையோ?
சிலையின் உவர்ப்பில்
தேடுவது பிழையில்லை
அணங்கை!
நல்லை அல்லையோ?
நான் புணர்வது!
ஆண்மை அல்லவோ?
நிதர்சனங்களின் மேன்மையில்...
விதர்ப்பங்களின் வார்ப்புகள்
என்னவோ?
கிடைக்கும் வரை
தேடுதலே....
என் முடிவு!
நின்னையன்றி பிறிதொன்றுமில்லை....
மனையாள்!


Close (X)

8 (4)
  

மேலே