நான் எம்மாத்திரம்

கண நேரத்தில்
அவள் கால்சிவடுகள்
மணலில் சிற்பம்
பதித்தன

மேலாடை காற்றில்
ஓவியமாய் விரிந்தன

வார்த்தைகள்
கவிதையாய்
வந்து விழுந்தன

சிற்பியும்,ஓவியனும்,கவிஞனும்
அவளிடம் தோற்று கொண்டிருந்தார்கள்......

நான் எம்மாத்திரம்???

எழுதியவர் : (22-Aug-17, 8:12 pm)
சேர்த்தது : மீனா
Tanglish : naan emmaththiram
பார்வை : 107

மேலே