முத்தமொன்று கடன் கொடு
காதல் எனும் விஷமருந்தி
இதயம் துடிக்க வாழும் வரம்
பார்வைகள் மட்டும்
மருந்தென மாறி
உயிர் காக்கும் தினம்
வாயாடி விழிகள் இரண்டும்
தினம் ஒரு புதிர் போடும்
ஒட்டி கொண்ட இதழ்கள் மட்டும்
மொழியை துளைத்து தேடும்
ஆடை மாற்றி தெருவில் நடக்கும்
தேவதை இவளே என்று
திரும்ப திரும்ப
திரும்பி பார்க்கும்
மோகம் கொண்ட விழிகள்
காதல் பசி
எல்லை மீறி
நான் தவித்து நிற்கும்
நொடிகளில் மட்டும்
முத்தமொன்றை கடனாய் கொடு
சிந்தாமல் சிதறாமல்
வட்டியுடன் திருப்பி அளிக்க
அவ்வ பொழுது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
