கற்பனை காதலன்
![](https://eluthu.com/images/loading.gif)
தமிழ் என்னும் அமுத மொழி கொண்டு
நான் எழுதிய அழகு கவிதை அவன்
தொடர் கதையாய் நான் எழுத விரும்பும்
என் அருமையான குட்டி கதை அவன்...
சின்ன சின்ன ஆசைகள் கொண்டு...
நான் சித்தரித்த சிலை அவன்....
என் கண்ணின் கருவிழி கொண்டு...
நான் கண்ட கண்மணி அவன்...
நீண்ட காலமாய் நான் தேடி தீர்த்த..
என் வாழ்நாள் பொக்கிஷம் அவன்..
நினைத்து நினைத்து நான் சிரிக்கும்....
என் செல்ல புன்னகை அவன்....
நிலா சுற்றும் பூமி போல...
நான் சுற்றும் என் உலகம் அவன்...
கொட்டி தீர்த்த மழைக்கு பின்னர்...
எட்டி பார்க்கும் துளிர் பனி அவன்...
கொஞ்சி கொஞ்சி நான் பேசும்..
மழலை மொழி அவன்...
தனிமையில் என் சிந்தையில் பறக்கும்..
அழகு பட்டாம்பூச்சி அவன்...
பேசி பேசியும் எப்பொழுதும் தீராத...
நான் கொண்ட என் அற்புதம் அவன்...
எப்பொழுதும் என்னுடன் இருக்கும்..
என் நான் அவன்.....