உள்ளப் பாடல்

நினைவே எரிக்காதே - நீ
நீரென நினைத்திருந்தேன் !!
கனவே கரைக்காதே - நீ
கனலென நினைத்திருந்தேன் !!
மனமே துடிக்காதே - உனை
மண்ணாய்க் கருதுகிறேன் !
வினையே அழுத்தாதே - உன்
விந்தையை நான் மறந்தேன் !!

பொழுதே நெருக்காதே - நீ
போவாய் என நினைத்தேன் !
அழிவே விலகாதே - உன்மேல்
ஆசை கொண்டுவந்தேன் !
விழைவே நினைக்காதே - உனை
வீணெனக் கருதுகின்றேன் !
அழகே அழைக்காதே - நான்
அழிவதில் உறுதி கொண்டேன் !!

மலரே சிரிக்காதே - உன்
மணம்போல் வாழ்வு கொண்டேன் !
சிலையே முறைக்காதே - நான்
சீக்கிரம் உனை அடைவேன் !
கலையே தடுக்காதே - நான்
கவிதையில் வாழ்கின்றேன் !
உலகே மறக்காதே - என்
உள்ளத்தைப் பாடுகிறேன் !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:37 am)
பார்வை : 106

மேலே