இசைமருத்துவர் இசைஞானி

யாவருமிங்கே வாழப்போராடும்
யுத்தக்களம்தான் இது....
எத்தனையோ பாரம் மனதைக் கிழிக்க,
எங்கயிிருந்தோ ஓடி வந்து இதய மருத்துவம் செய்கிறது ஒரு ராகம்....

செங்கதிரோனின்
இரக்கமற்ற கடுங்கனலோடு
உழைத்து அலுத்து
ஓயும்போது
கூழாங்கற்கள் கானமிடும் ஓடைநீரோட்டத்தின்
புனிதநீராய்
அள்ளிப் பருக
உயிர்மீட்கிறது ஒரு கீதம்....

தாயின் முகங்காணாத
அனாதை இல்லக்
குழந்தையின்
நீண்டநெடிய
துன்பத்தைத் தூக்கித்
தூரம் எறிகிறது
ஒரு பல்லவி..

மரணிக்கும் நொடியில்
தலைநிமிரும்
சிறுபுல்லுக்குக்
கிடைத்த
வானின் உயிர்நீராய்
உயிரளிக்கிறது
ஒரு வீணையின்
இசை....

தன் துணையை
இழந்த குயிலின்
கடந்த கால
காதல் அசைவுகள்
பெருஞ்சோகத்தை
ஊற்றெடுக்க,
அக்கணம் பேரின்பம் தருகிறது
ஒரு மூலையின்வழி வரும்
புல்லாங்குழல் இசை.....

#என்றென்றும்
#ராஜா
#ராஜாதான்

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (23-Aug-17, 10:48 pm)
பார்வை : 92

மேலே