கடலோர மூச்சு

கடல் ...
காதலர்களுக்கு
சுவரில்லா
படுக்கையறை

பார்வையாளர்களுக்கு
அலுப்பில்லாப்
பொழுதுபோக்கு

வியாபாரிகளுக்கு
வாடகையில்லா
விற்பனைத்தளம்

ஆனால் மீனவர்களுக்கு
உயிருக்கு உத்தரவு
இல்லா உறைவிடம்

கடல் அதில் ஆழ உழைக்கும் எங்கள் உடல்...
கட்டுமரமொன்று போதும்
கரையேறிடுவோம்
வாழ்க்ககையிலே..
இரவா பகலா எப்பொழுதும் ஈரத்திலே
வாழ்க்கைப் போகுது கடலோரத்திலே..
இடி மின்னலில் செத்தாலும்
இலங்கைக்காரன் சுட்டாலும் கேட்க நாதியில்லை எந்நாளும்...
வலை போட்டு மீனைத்தான் பிடிப்போம்
அலை கேட்டு வானைத்தான் ஒடிப்போம்
வருத்தமில்லையென கடலையே அளப்போம்..
காதல் முத்தம் தந்திடுவாள்
பிள்ளைகளைக் காத்திடுவாள் - கரைசேர
காலம் கொஞ்சம் கடந்துவிட்டால்
கண்ணீர்விட்டுக் காத்திருப்பாள்..
கூவி மீனை விற்றிடுவாள்
தாவி சோறு
பொங்கிடுவாள்
பாவி அவளுக்கே
தெரியாது பாதியிலே விதவைக்கோலம்
பூண்டிடுவாள்...
ஆழம் போனால்தான் பிழைப்பு
இது
காலம்கொடுத்தத்
தீர்ப்பு
நீர்மேடைமேல்தான்
எங்கள் நடிப்பு...
தென்றல்
எங்களின் செல்லப்பிள்ளை
சூறாவளி எங்களின்
சொந்தபந்தம்
சுனாமி எங்களின்
விருந்தினர்கள்
இறப்பு
எங்களுக்கோ
கை வந்தக் கலை
என்று மாறிடும்
மீனவர்களின் நிலை?

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (23-Aug-17, 10:37 pm)
Tanglish : kadalora moochu
பார்வை : 95

மேலே