அணைத்த கரங்களை தவிர்க்கும் கொடியவர்கள்

தவழும்பொழுதில் அவர்களை
வாரி அள்ளிய அக்கரங்கள்
தள்ளாமையால் பற்ற கரம்
வேண்டுகையில்
மகிழ்ச்சிக்கு தடையென
முதுமை அகத்தில் சேர்க்கும்
அப்பிள்ளைகளை தாங்குவதை
இழிவாய் கருத்துகிறாள்
அன்னை பூமி...

எழுதியவர் : பாலா (24-Aug-17, 9:51 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 107

மேலே