அனுபவிப்பவருக்கே தெரியும்

தழுத்த குரலில்
அப்பாட்டி தானம் கேட்ட
குரலை காதில் வாங்காதபடி
கடந்து சென்றது அச்சீமானின்
குதிரை வண்டி

தான் சேர்த்த இருசில்லறையில்
ஒன்றை தன் இடுப்பில்
இருக்க கட்டிய சுருக்குப்பையிலிருந்து
அந்த பாட்டியிடம் நீட்டியது
அந்நிலைக்கு வாரா மற்றோர்
மூதாட்டியின் கரங்கள்

தனிமையுடன் வறுமை கூடிய
முதுமையின் கொடுமை
அனுபவிப்பவருக்கே தெரியும்

எழுதியவர் : பாலா (24-Aug-17, 9:40 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 1728

மேலே