பூச் சூடும் வேளை
பூமகள் காதல் கொள்ள நானும்
பூச்செண்டால் அழகு கூட தலையில்
தலைவன் நான் சூட்ட நாணமோ
தலைவிக்கு மெல்லிய மேனி நடுங்க
காமம் தலைக்கேற ஏனோ மறைக்க
கண்கள் நிலம் நோக்க வெட்கம்
மேலிட தலையும் குனிய வேளை
மோகமுள்ளாய் குத்தும் நெஞ்சமும் தானே !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்