ஒன்றாக கல்லூரியில் படித்து இருக்க கூடாதா
நீயும் நானும் ஒரே வகுப்பில் ஒன்றாக கல்லூரியில்
படித்து இருக்க கூடாதா !
கல்லூரியின் வாகனத்தில் கடைசியில்
அமர்ந்து கொண்டு கூட உன்னை ரசித்துக்கொண்டே
வந்து இருப்பேனே !
உன் கால் தரைபடும் நேரத்திற்கெல்லாம்
பூக்கள் தூவி வைத்து இருந்து இருப்பேனே !
வகுப்பறையில் உன் முகம் காண முன்னதாகவே
வந்து அமர்ந்து இருப்பேனே !
கல்லூரியில் சண்டையிட்டாவது வகுப்பறையின்
ஜன்னல் பக்கத்தில் நீ அமர்ந்து கொள்ள இடம் வாங்கி
தந்து இருப்பேனே !
வகுப்பு முடியும் வரை ..என் விழி இரண்டும்
உன்னை தவிர வேறு எது ஒன்றையுமே
கவனித்து இருக்காதே !
உனக்கு பிடித்த ஒவ்வரு உணவையும் என்
அம்மாவிடம் சொல்லி ! நித்தம் சமைத்து
வாங்கி வந்து உனக்கு தந்து இருப்பேனே !
நாளும் உனக்கொரு கவிதை எழுதி
உன் புத்தகத்தில் உனக்கே தெரியாமல்
ஒளித்து வைத்து இருப்பேனே !
ஒளித்து வைத்த கவிதையை -நீ
ஒளிந்து நின்று படிக்கையில் உன் வெட்கம்
கொண்ட முக அழகை ரசித்து இருப்பேனே !
உன் அலைபேசி எண்னை எனக்கு தரமாட்டேன்
என்று சொன்னதும் ! அன்று இரவெல்லாம் நான்
அழுத கதையை யாரிடமும் சொல்லாமலே
மறைத்தே வைத்து இருப்பேனே !
என் புத்தகத்தின் முதற்பக்கத்தில் உன்
அலைபேசி எண்ணும் இப்படிக்கு உன்னவள் ..
என்று எழுதி இருந்ததை ! நண்பர்களிடம் சொல்லி
கொண்டாட்டமும் குதூகலமுமாய் இருந்து இருப்பேனே !
எனக்கு பிடித்த வண்ணத்தில் சுடிதாரில் வந்து
என்னை ஏதோ செய்வபவள் போல் பார்த்ததை
எப்படித்தான் எடுத்துக்கொள்ள ! என்னவாக இருக்கும்
என்று நண்பர்களை பாடாய் படுத்தி இருப்பேனே !
செய்முறை வகுப்பில் உனக்கு காயம் பட
என் விழியில் தாரை தாரையாய் கண்ணீர்
வழிந்ததை ! ஏன் இப்படி என்று இதயம் சொல்லி
கேட்டு தெரிந்து இருப்பேனே ! இது காதல் என்று !
பத்திரமாய் நீ வீடு போய் சேர்ந்த பின்னரே
நான் என் வீடு போக வேண்டும் என்பதில்
உறுதியாய் நான் இருந்து இருப்பேனே !
என் செல்லக்கிளியே ! என் ஆச ராணியே !
என் அழகு பதுமையே ! என் செல்லக்குட்டியே !
என் தங்கசிலையே ! என் வெல்லக்கட்டியே !
நீயும் நானும் காதல் செய்வோம் !
திருமணம் செய்வோம் !
திருமணத்திற்கு பின்னும் இன்னும்
அதிகமாய் காதல் செய்வோம் !
உன்னை போலவே "தேவதை" இரண்டை
பெற்றுக்கொள்வோம் !