வேகம்

அரை நொடி அவசரத்தில் ஆயுள் இழந்தாயோ???
குருதி வேகம் உயிரை பறித்ததோ???
முந்திச் செல்ல முயன்று முட்டிக் கொண்டாயோ???
காலன் அழைத்தனோ கைபேசி வழியே???
முத்தமிட்ட உதடுகள் இரத்தத்தில் திளைக்க மூச்சடைத்துப் போனேன் முகம் பார்த்த தருணத்தில்,
பிணவறையில் முகம் காட்டவா மணவறையில் கரம் கோர்த்தாய்???
உருக்குலைந்த பின் உடற்கூறு எதற்கு???
கனவா கண்டேன் காலம் முடியுமென???
சற்று பொறுத்திருந்தால் சகலமும் கண்டிருப்போமே,
சத்தமில்லாமல் போய் விட்டாயே சாதக மற்ற தருணத்தால்???
கதறி அழக் கூடத் தெம்பில்லை காரியம் நடக்கும் காலத்தில்,
மைனாக்கள் கொஞ்சக் கண்டு மணாளன் ஞாபகங்கள்,
மணநாள் அல்லவா
கல்லறையில் காத்திருக்கிறேன் கண்ணாளன் கரம் கோர்க்க.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (24-Aug-17, 9:13 pm)
Tanglish : vegam
பார்வை : 79

மேலே