Naan
நான் யாறென்ற போதிலும்
நான் என்று இருக்கும்பட்சத்தில்,
த்தான் என்ற கர்வம் என்னுள் இல்லையென எண்ணினாலும்,
எனக்குள்ளும் உண்டு குறைகள் கூற ...
குறைகளற்ற மாந்தர்களும் இவுலகில் இல்லையோ ..?
மதிகெட்டு சுடும் வார்த்தைகளால் பிறர் மனம் தகர்த்தேனோ...! அல்லது மனமுடைந்து தான் போனேனோ...!
பொருளற்ற வீண்விவாதம் ஒலிக்கையில் செவிகள் உண்டு, குரல் வசனம் இல்லை..
திக்கெட்டும் சுமைகள் வந்து கொட்டும்,
பட்டும் திருந்தா நெஞ்சன் என சூட்டுவார் பெயர் ..
அடங்கா நெஞ்சனின் அடக்கிய துயர், பொங்கி பொழிகிறதே புன்னகைகளாய்..
உங்கள் இருவிழிகளின் எதிரே..