பெண்ணின் தனிமை வலி

துயில் எழும்போது துன்பம் வருமென்று நினைக்கவில்லை
துன்பத்தோடு சேர்ந்த தனிமை எனக்குப் புதிதில்லை

குலுங்கிக் குலுங்கி சிரிக்கும்போது என்னைச் சுற்றி பத்து பேரு,
குமுறி குரலின்றி அழும்போதும்
என்னைச் சுற்றி பத்து பேரு,
பத்து பேரு சுற்றி இருந்தும்
என் தனிமைக்கு காரணம் யாரு.

பெண்மை குணம் ஊட்டி வளர்த்த அன்னைக்கு
என் கண்ணீர் நிலை எப்படிக் காட்டுவேன்?
வாழ்வின் இனிமையை உரைத்த தந்தைக்கு
உன் பெண் தனிமை என்று எப்படி உரைப்பேன்?

கண் மையைப் பகிர்ந்த தோழி
என் கண்ணீரை பகிர வரவில்லையே.
வளைவி விலை கேட்ட தோழி
என் வாழ்க்கை நிலை கேட்கவில்லையே.
துணையின் பெயர் கேட்ட தோழிக்கு
தனிமை என் துணை என்று புரியவில்லையே.

கண்ணீரில் வாழும் என் கன்னங்கள் பாவம்
கரங்களின்றி காயும் என் கண்ணீர் பாவம்
யார் கரம் வந்து துடைக்கும்னு ஏங்கும்
நானும் பாவமில்லையா..?

எழுதியவர் : Mohanaselvam (25-Aug-17, 4:57 am)
பார்வை : 3232

மேலே