பூச்சூடும் வேளை
காவியத்தின் காதல் போலக்
.....காதலைநான் தேடி வந்தேன்
தேவதை உன்னைக் கண்டு
.....தேடலை நிறுத்திக் கொண்டேன்
தூவானம் தூறும் போது
..... தோள்மீது சாய்ந்து கொண்டு
பூவைமுகம் மலரக் கண்டேன்
.....பூச்சூடும் வேளை தன்னில்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்