என்னுள்ளே நீயும் வந்தாயே
காலங்கள் மெல்ல மெல்ல கரைகின்றது, என்-
கனவுகளும் மெல்ல களைகின்றது,
களைகின்ற என் கனவுகளை கரை சேர்க்கவே
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
என் கண்களின் கண்ணீரைத் துடைத்திடவும்,
என் இதயத்தின் வலிகளை விரட்டிடவும்,
விண்ணைத்தாண்டி விண்மீன்களைத் தீண்டி என்னை கரைசேர்க்கவே
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
உன்னில் தொலைந்த என்னை மீட்டிடவே,
என் வாழ்வில் உந்தன் ஒளியை ஏற்றிடவே,
என் நினைவில் நின்று நீங்காமல் தினம் தினம்
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
உன் ஓரப்பார்வை அதைக் கண்ட நோடியிலே,
என் உயிரின் ஆழம் சென்று ஒழிந்தாயே,
ஒழிந்த உன்னை தோண்டி எடுக்கவே
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
என் உயிரை உறுவி எடுத்தாயே,உன்னால்-
என் உணர்வை இழந்து நின்றேனே,என்-
உணர்வினை ஊட்ட உன் உயிரை என்னில் ஊற்ற
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
உன் கண்களில் விழுந்து தொலைந்தேனே,
உன்னால் காயங்கள் பலவும் கண்டேனே,
என் காயங்களைப் போக்கும் மருந்தாக
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
இமைக்க கூட மறந்தேனே உன்னை கண்டு,
இமைப் பொழுதும் பிரிய மனமின்றி,
என் இமைகளை திருடிக்கொண்டு போகவே
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
பூங்காற்றைப் போல,நானும் உன்னைத் தீண்டவே,
தேகம் இழைத்து தென்றலின் மேனியைக் கொண்டேனே,
திசையெட்டும் திரியும் என்னை தீண்டித் தீருத்தவே
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
திகைத்துப் போய் தான் நான் நின்றாலும்,
திசையெல்லாம் மறந்து தான் நான் சென்றாலும்,
மங்கை உன்னை கண்டு காலம் என் கைவசமாகவே
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
என் நினைவின் நகலாக நீ நின்று ஆடவே,
திரும்பும் திசையெல்லாம் உன் திருமுகமே தோன்றவே,
தீராது சாபமென்று திருநீரிட்டு சொல்லவே
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.
என் சோதனைகளை சாதனைகளாகவும்,
என் வேதனைகளை வசந்தமாகவும் மாற்றி
என்னை வசந்தகால சாதனையாளனாக மாற்றிடவே
வந்தாயே வந்தாயே
என்னுள்ளே நீயும் வந்தாயே.

