அத்தனையும் காதல்
வரம்பு தொட்ட முத்தமொன்றில்
உதடு வெடிக்க இரத்தம் காட்டி
என் நெஞ்சில் குத்தி லூசு என்றாய்.....
சின்னதாய் சிகையைக் கோதி
இதான் அழகு கிறுக்கா என்கிறாய்.......
உன் பக்கத்து வீட்டு குழந்தையாய்
பிறந்திருக்கலாம் கேட்காமலேயே
பல முத்தங்கள் கிடைத்திருக்கும் என்கிறேன்... சீ,போ என்கிறாய்.......
மழையில் நனையலாம் என்கிறேன்...
நான் உன்னில் இடறி விழ
தூக்கி சுமக்க சொல்கிறாய்........
ஆம் அத்தனையும் காதல்...!!!!