உன்னதம்

நட்சத்திரங்கள் முகம் பார்த்து
மினுக்கிக் கொள்ளும் நிலவெனும்
கண்ணாடியில் நம்மிருவர்
முகம் பார்த்துக் கொள்ளவில்லை......
உன் முகத்தை நிலவாய் கண்டேன்
நீயோ மெய்யென மையினால் கண்ணெழுதி கருநிறப்பொட்டை
கன்னத்தில் வைத்துக் கொண்டாய்.!!
பிறை காட்டு எனக் கேட்டால் - என்
முகத்தினுள் முகம் புதைத்து - உன்
நெற்றிச் சுளிப்பினைக் காட்டினாய்.!!
நிலவு கருப்பாகும் நாளொன்று உண்டு
எனக் கேட்ட போது- என் மடி மீது சாய்ந்து உன் கருங்கூந்தல் மட்டும்
நான் காண படுத்துக் கொண்டாய்.!!
நான் தேடும் அத்தனை உருவகங்களிலும்
உன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறாய்..
அன்பினை செலுத்த உன்னிடம்
போராடித் தோற்கிறேன்....
உன்னை நாடித் திரிவதிலேயே
உன்னதம் காண்கிறேன்

எழுதியவர் : தமிழன் தங்கா (27-Aug-17, 1:40 pm)
Tanglish : unnatham
பார்வை : 193

மேலே