கவலையின்றி வாழுங்கள்

கவலையின்றி வாழுங்கள் !
கவிதை by : பூ.சுப்ரமணியன்

மனிதனின் கையால் அழியும்
வலையில் மீன்கள் சிக்கினால்…
கவலையில் மனிதன் சிக்கினால்
மன அமைதி கெடும் !

கவலைக்கு நம்மைப் பற்றி
கவலை கிடையாது
கவலை உடல் மனம் ஆத்மா
கடுமையாகத் தாக்கும் !

கவலையில் மூழ்கினால்
கவலை உன்னை
அரித்துத் தின்றுவிடும் !

உணர்ந்து கொண்டு
கவலையை தூக்கி எறிந்தால்
மனக்கவலை நம் காலடியில்
மண்டியிட்டு ஓடிவிடும் !

கவலையை நோக்கி
தன்நம்பிக்கை உழைப்பு
வலைகளை
வீசிப் பாருங்கள்
கவலைகள் எல்லாம்
வலையில்
சிக்கி மடிந்துவிடும் !

பிறப்பு இறப்பு எல்லாம்
இறைவனின் விளையாட்டு
இயற்கை இழப்புகளை
கவலை தடுக்க முடியாது
உணர்ந்து கொண்டு
கவலையின்றி வாழுங்கள் !

நமது துக்கத்தின்
நினைவலைகளோ
இரவு தூக்கத்தில்
திரைப்படமாக ஓடுகின்றன

இரவில் இமைகளை
துக்கம் தழுவாமல்
தூக்கம் மட்டும்
தழுவினால் வாழ்வு
ஆக்கம் பெறும் !

துன்பங்கள் துயரங்கள்
பகல் கனவாக நினைத்து
கவலையின்றி வாழுங்கள் !


பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை


Close (X)

5 (5)
  

மேலே