காதல்

தவறெனத் தெரிந்தும் செய்யத் தூண்டும்
குற்றமது காதல்
தீயெனத் தெரிந்தும் தீண்டத் தூண்டும்
திமிரது காதல்
நஞ்சனெத் தெரிந்தும் நா நல்கும்
அமுதமது காதல்
கடலெனத் தெரிந்தும் கண்மூடி குதிக்கும்
துணிச்சலது காதல்
சீதையே ஆகினும் சிறைபிடிக்கும்
இராவணமனம் எனது.
"காதல்"