நீரும் நானும்

பத்துமாதம் வசித்தேன் குடத்துநீரில்.

வழுக்கி விழுந்தேன் ,
வாழ்க்கையில் ஆற்றுநீராய்,

சொந்தமெல்லாம் சேர்ந்தனர் ஊற்றுநீராய்,

துன்பம் சில கண்டேன் வெந்நீராய்,

இன்பம் சில நேரம் துளி பன்னீராய்,

பணம் பல நேரம் வடியும் நீராய்,

கடந்த காலம் சிந்திய நீராய்,

வருங்காலத்தை எண்ணி கனவுநீராய்,

நிகழ்காலம் செல்கிறது குடிநீராய்,

வாழ்வில் சில நிகழ்வுகள் தேனீராய்,

மனதுக்குள் சில மண்ணுக்குளொழிந்த மழைநீராய்,

காதல் கண்டேன் கானல் நீராய்,

அடிக்கடி அதன் வலிகள் காற்றில் நீராய்,

ஆசைகள் தீர்ந்தது கண்ணீராய்,

சில நினைவுகள் அடிக்கடி உமிழ்நீராய்,

சில இழப்புகள் மனதில் கனநீராய்,

சிலரை உணந்தேன் சேற்றுநீராய்,

சிலரை அறிந்தேன் பனி நீராய்,

பயணம் தொடர்ந்தேன் நதிநீராய்,

முயற்ச்சிகள் துவங்கினேன்
அலை நீராய்,

வாய்ப்புகள் கிடைதன தீர்த்த நீராய்,

வாழ்க்கை என்பதென்ன உணந்தேன்
துளிநீராய்,

உயிர் விலகும் ஒருநாள் ஆவிநீராய்,

உடல் உடையும் ஒருநாள் குமிழ்நீராய்,

எல்லாம் அழியும் ஒரு பிடி வெண்ணீறாய்,

அதுவரை வாழ்வோம் நன்நீராய்.

இப்படிக்கு
சுரேஷ் காந்தி.

எழுதியவர் : சுரேஷ் காந்தி (28-Aug-17, 12:45 am)
Tanglish : neerum naanum
பார்வை : 321

மேலே