காதல் நட்பு
கல்லூரி காதல் நட்பு... (love or friendship... In college life)
மாயோள் மாயம் செய்கிறாள்..
முதலில் தயக்கம்...
அருகில் சென்று பேச...
ஏன் தொல்லை என்று..
விலகியும் நின்றேன்...
அவள் அழகில்.... !
நேரம் வந்தது..
நாணம் சிறிது நின்றது...
நானாக சென்று பேச..
பெண் என்னிடம்..
பதில் தந்தாள்...
பதுமை பார்வையில் ...
போர் தொடுத்தாள்...!
மாயோள் மாயம் செய்கிறாள்..!
காதலா... நட்பா..
நான் அறியவில்லை...
எதிர் பாலினம்...
அறியுமா என் மனம்...
எதிரே சறுகி நிற்கிறேன்..!
உயிர் உருகி நிற்கிறேன்...!
ஏதோ உந்துதல் உள்ளுக்குள்..
என் வார்த்தைகள்..
அவள் வார்த்தைகளுடன் இணைய...
காலம் செல்கிறது...
கைகள் கோர்த்து அவளுடன் ...
என் கல்லூரி வாழ்க்கையில்...!
கதவை திறக்கும்..
காற்றுப் போல்..
என் கண்களை அவள்..
அடிக்கடி திறந்து மூடினால்...
அவளைக் காணச்செய்கிறாள்..
கொஞ்சம்..
கவனமும் கழன்றது என் படிப்பில்... !
மாயோள் மாயம் செய்கிறாள்...!
தனி கவனம் கொண்டு...
கற்பிகிறாள் என்னிடம்...
தேர்வு தாளில் பார்க்கிறேன்..
அவள் அன்பினை...
மதிப்பெண்களாக....
நான் மதிக்கும் பெண்ணாக...!
சரிதான்... சரிதான்...
காதலோ..நட்போ...
பெண் இடத்தில்...
தனி இன்பம்..
தனி இன்பம்..
தன் மனம்...
தவறா எண்ணாதவரை..!
தவறா எண்ணாதவரை...!
மாயோள் மாயம் செய்கிறாள்..!
By bmh arun...